பிரபல நடிகையை தாக்க முயற்சித்த அரசியல் கட்சி தொண்டர்கள்: பெரும் பரபரப்பு

பிரபல நடிகையும் நகரி தொகுதியில் எம்எல்ஏவுமான ரோஜாவை அவரது சொந்தக் கட்சி தொண்டர்களே தாக்கி முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நடிகைரோஜா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ வாக இருக்கிறார் என்பதும், அவருக்கு சமீபத்தில் ஆந்திர மாநில தொழில்துறை உட்கட்டமைப்பு கழக தலைவர் பதவி கொடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் கே.வி.புரம் என்ற பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை ரோஜா காரில் சென்றபோது திடீரென அவரது சொந்த கட்சியை சேர்ந்த சிலர் அவரது காரை வழிமறித்து அவருக்கு எதிராக கோஷம் பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு சிலர் ரோஜாவை தாக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் ரோஜாவை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை ரோஜாவிற்கும் நகரி பகுதியைச் சேர்ந்த அம்முலு என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடந்து வருவதாகவும் இதனை ஒட்டியே இந்த தாக்குதல் முயற்சி நடந்து இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன

https://twitter.com/as_lingam/status/1214034599417794560