இனி ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளில் சேரலாம்!!!!

ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது குறித்து ஆராய பல்கலைக்கழக மானியக் குழு பிரத்யே குழு அமைத்துள்ளது. 

பல பல்கலைக்கழகங்களிலோ ஒரே பல்கலைக்கழகத்திலோ ஒரே காலத்தில் பல பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு அனுமதி வழங்குவது பற்றி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆலோசிக்கிறது. 

இதைப் பற்றி ஆய்வு செய்து முடிவு எடுப்பதற்காக யுஜிசி துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே பல்கலைக்கழகம் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ அல்லது பகுதி நேரமாகவோ இரு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் பயில்வதில் உள்ள பிரச்சினைகளை இந்தக்குழு ஆய்வு மேற்கொள்ளும். 

இனி ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளில் சேரலாம்!!!!கடந்த 2012ஆம் ஆண்டிலேயே யுஜிசி இந்த விஷயத்தில் ஆய்வு நடத்தியது. அப்போதும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணை வேந்தர் ஃபுர்கான் கமர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் ஆலோசனைகளைப் பெற்றது. 

தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ளதால் அதனை பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்கட்ட பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கலாமா என்பதை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது எனவும் இந்தக் குழு கடந்த மாதமே அமைக்கப்பட்டுவிட்டது என்ற அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகியுள்ளது பலரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.