பறவையுடன் நடிக்கும் யோகிபாபு

ஒரு நடிகர் அதுவும் வித்தியாசமாக ஒரு காமெடி நடிகர் கிடைத்து விட்டால் அவருக்கு எல்லா வித வேடத்தையும் போட்டு பார்த்து விடுவார்கள் சினிமாவில். அப்படித்தான் யோகிபாபுவின் கதையும். சில வருடங்களாக இவர் பிஸியானாலும் ஆனார். இவரை பலவித கெட் அப்கள் கொடுத்து நடிக்க வைத்து மக்களை சிரிக்க வைப்பதில் இயக்குனர்கள் மும்முரமாய் உள்ளனர்.

காக்டெய்ல்’. என்ற படத்தை முருகன் என்ற இயக்குனர் இயக்குகிறார். யோகி பாபு நாயகன் போன்ற தோற்றத்தில் நடிக்கிறார், இவர்களுடன் சாயாஜி ஷிண்டே  காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

விஜய் டி வி கலக்கப்போவது யாரு குரேஷி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முக்கியமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெயில்” என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது