ரிசர்வ் வங்கியிடம் அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட யெஸ் வங்கி: அதிர்ச்சி தகவல்

யெஸ் வங்கியின் வாராக்கடன் அதிகரித்து விட்ட காரணத்தினால் ரிசர்வ் வங்கியிடம் அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மனதில் இடம்பிடித்து நல்ல முறையில் இயங்கி கொண்டிருந்தது. ஆனால் திடீரென இந்த வங்கிக்கு வாராக் கடன்கள் அதிகரிப்பதாகவும் அதனால் அந்த வங்கியை நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கூறப்பட்டது

இந்த நிலையில் யெஸ் வங்கி தற்போது ரிசர்வ் வங்கியிடம் அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் எடுக்க அனுமதியில்லை என ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்துள்ளது