யாவரும் நலம் இரண்டாம் பாகம் வருகிறதா

கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் யாவரும் நலம். இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி இருந்தார். அதற்கு முன்பு விக்ரம் குமார் சிம்பு, த்ரிஷா நடிப்பில் முதல் படம் இயக்கி இருந்தார். சிம்பு படம் ஓடவில்லை என்பதால் நன்றாக ஹோம் ஒர்க் செய்து இயக்கிய படம்தான் யாவரும் நலம்.

தமிழில் நீண்ட இடைவேளைக்கு பின் வந்த சிறந்த திகில் படமாகவும் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆத்மாக்கள் மனித உடலில் மட்டும் வருவதில்லை தனக்கு பிடித்த எந்த ஒரு ஊடகத்தினையும் அது பயன்படுத்தும் என்பதே படத்தின் வித்தியாசமான திகிலூட்டும் கரு.

டிவி சீரியல் வழியாக பேய் வருவது இப்படத்தில் பார்வையாளர்களை மிரட்ட இயக்குனர் விக்ரம் குமாரின் அனைத்து முயற்சிகளுமே நன்றாக பலித்தது.

இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான யாவரும் நலம் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வித்தியாசமான பேய் படமாக வந்து வசூல் குவித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக மாதவன் உறுதிப்படுத்தி உள்ளார்.