விவேக் கொடுத்த மிக தவறான தகவல்- குழப்பத்தில் சினிமா ரசிகர்கள்

வெள்ளைப்பூக்கள் என்ற படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.இந்த படத்தில் கதையின் நாயகனாக விவேக் நடித்துள்ளார். அமெரிக்க தமிழர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படமிது.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் விவேக் பேசியதாவது இப்படத்தில் நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்துக்கு சத்யராஜை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். இருப்பினும் சத்யராஜ் இது போல கதாபாத்திரத்தில் அதிகம் நடித்துவிட்டதால் புதிதாக நீங்களெ நடியுங்கள் என சொன்னதால் நானே நடித்தேன்.

எனக்கும் ஹீரோவுக்கும் ராசி இல்லை கமல்ஹாசனின் பாபநாசம் வந்தபோது எனது நான் தான் பாலாவும் ரிலீஸ் ஆகியது. கமலின் பாபநாசம் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்ரமித்ததால் என் படம் போனது.

இதை அப்படியே தலைப்பா போட்றாதிங்க என விவேக் ஜாலியாக கூறினார். கமலுடன் விவேக் இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நீண்ட நாளாக கோலோச்சி வரும் இருவரும் சின்ன வேடத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் விவேக் சொல்லிய பாபநாசம் படம் 2015 ஜூலையில் ரிலீஸ் ஆகியுள்ளது. விவேக்கின் நான் தான் பாலா 2014 ஜூனிலேயே ரிலீஸ் ஆகி விட்டது அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்காமல் போகும் என்பதே உச்சக்கட்ட குழப்பமாக உள்ளது