மதுரை தொகுதியில் பிரபல எழுத்தாளர் போட்டி

நாடாளுமன்ற தேர்தலுக்காக தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்துக்கு ஏப்ரல் 18ல் தேர்தல் என முடிவாகியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் யார் வேட்பாளர் என இறுதி செய்து வருகின்றன அரசியல் கட்சிகள். அந்த வகையில் திமுகவோடு கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற தொகுதி ஒரு காலத்தில் கை கொடுத்த தொகுதியாகும். இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் சார்பில் நின்ற வேட்பாளர் மோகன் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். அவரின் மறைவுக்கு பிறகு பெரிதாக சொல்லும்படி இல்லை.

இப்போது பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது வாங்கியவரும் காவல் கோட்டம் என்ற புதினத்தை எழுதியவருமான சு. வெங்கடேசன் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகிறார்.