Connect with us

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

செய்திகள்

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடும் பீதியை கிளப்பி வரும் வேளையில் சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகள் பேரழிவை சந்தித்து வருகின்றன.

இதனிடையே who என அழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அமைப்பிற்கான சிறப்பு தூதர் டேவிட் நபாரோ இந்தியாவின் நடவடிக்க்கைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி லாக் டவுனுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

உலகம்தோறும் கடும் பாதிப்புகளை இது ஏற்படுத்தி வந்தாலும் வைரஸ் தொற்றின் ஆரம்பத்தின்போதே தைரியமாக லாக் டவுன் அறிவித்த பிரதமர் மோடிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பிற்கான சிறப்பு தூதர் டேவிட் நபாரோ, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு  உத்தரவை அமல்படுத்தவேண்டும். அதன்மூலம் தான், மக்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும். இந்தியாவில், அந்த நடவடிக்கை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது.

வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, குறைந்த  எண்ணிக்கையில் இருந்தபோதே, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது மிகச் சரியான முடிவு என்றார்.  எனினும், இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது வேதனை அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதை அறிந்தும் சரியானதொரு நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top