Connect with us

உலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து

விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: 3 வது சுற்றிற்கு முன்னேறிய சிந்து

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. இவர் முதல் சுற்றில் பங்கேற்க தேவையில்லை என்றும் நேரடியாக 2 வது சுற்றில் ஆடத் தகுதி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டதாலும் இவர் நேரடியாக 2 வது சுற்றில் களமிறங்கினார்.

பி.வி.சிந்து சீனதைபே வீராங்கனை பாய் பூ போவை எதிர்கொண்டார். 43 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த பி.வி.சிந்து எதிர் போட்டியாளரை திணறச் செய்தார், இதன்மூலம் இறுதியில் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 3 வது சுற்றில் பி.வி.சிந்து அமெரிக்கா வீராங்கனை பீவென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் வீராங்கனை அகானே யமாகுச்சி 14-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top