Connect with us

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

கல்வி

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (ஐபிபீஎஸ்) நிரப்பப்பட உள்ள Analyst Programmer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows) பிரிவில் 03 பணியிடங்களும், Research Associate  பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows)  பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும். Research Associate பணியிடங்களுக்கு Psychology, Education, Management பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

Analyst Programmer (Linux), Analyst Programmmer (Windows)  பணியிடங்களுக்கு ரூ.7,56,440 வரை, Research Associate   பணியிடங்களுக்கு ரூ.9,36,020 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.500  ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.ibps.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2019

Continue Reading

அதிகம் படித்தவை

To Top