சாக்‌ஷி பற்றி ஏன் இப்படிக் கூறினார் மதுமிதா..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மூன்றாவது வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன்படி, கொலையாளியான வனிதா மற்றும் முகைன், மற்ற போட்டியாளர்களை டாஸ்க்கில் கொலை செய்து வருகின்றனர். 

மேக்-அப்பை அழித்து நடிகை சாக்‌ஷியை அவர்கள் கொலை செய்தனர். அதேபோல, மைக்கேல் ஜாக்சன் போல ஆட வைத்து மோகன் வைத்தியா கொலை செய்யப்பட்டார்.

இந்த டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. கொலையாளிகளான வனிதா மற்றும் முகின் இருவரும் மற்ற போட்டியாளர்கலை வித்தியாசமாக  கொலை செய்தனர். நேற்று ஷெரீன் மற்றும் ரேஷ்மா கொல்லப்பட்டார்கள். 

சாக்‌ஷி பற்றி ஏன் இப்படிக் கூறினார் மதுமிதா..!

முகைன் ரேஷ்மா மீது கோல்டு காபி கொட்டி கொலை செய்தார், ஷெரீனுக்கு தர்ஷன் முத்தம் கொடுத்து கொலை செய்தார்

பின்னர், மதுமிதா கொல்லப்பட்ட சாக்‌ஷிக்காக புகழஞ்சலி செலுத்துகிறார். அப்போது வெளியே தான் பார்த்த சாக்‌ஷி வேறு, வீட்டுக்குள் இருப்பவர் வேறு. பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் நன்றாக நடிக்கிறார். கவினை காதலிப்பது போன்று நடிக்கிறார் என்று கூறினார்.


பிறகு சாண்டி, இது எல்லாம் பொய் கிடையாது உண்மைதான் என்றதும், அங்கே கலகலப்பு ஏற்படுகிறது. எனினும், கவின் அருகில் அமர்ந்திருக்கும் சாக்‌ஷிக்கு முகம் வாடிவிடுவது போன்று தெரிகிறது.

மதுமிதாவுக்கு மக்களின் வாக்குகள் அதிகமாக இருப்பினும், மதுமிதா கொஞ்சம் வாயை வெச்சுக்கிட்டு சும்மா இரும்மா என்கின்றனர் ரசிகர்கள்.