பிக் பாஸ் வீட்டில் சிறைக்கு செல்லப்போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரத்தை வெற்றிகரமாக முடித்து, நான்காவது வாரத்திற்குள் நுழையவுள்ளது.

கொடுக்கப்பட்ட லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை, நான்கு நாட்களாக கலகலப்பாக செய்து வருகின்றனர். கலகலப்பாக துவங்கிய டாஸ்க் சண்டையில் முடிந்துள்ளது.

டாஸ்க் முடிந்ததும், வனிதா மற்றும் முகைன் கொலையாளிகள் என்பதை அவர்களே அறிவித்தனர். பின்னர் யார் சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர் என்ற கேள்வியை பிக் பாஸ் எழுப்ப, சரவணன் மற்றும் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் சிறைக்கு செல்லப்போவது யார்?

இதனால் இவர்கள் இருவருக்கும் சிறை செல்ல வேண்டும் என்று தண்டனையை பிக் பாஸ் வழங்கினார்.

இது பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தியது. சரவணன் தானும் விளையாடியதாக தெரிவித்தார். முன்னதாக டாஸ்க் மீது அதிருப்தி தெரிவித்த சேரனும் போட்டியில் பங்கு கொண்டதாக கூறினார். எனினும், இதை வனிதா ஏற்றுக் கொள்ள மறுத்தார். 

சேரன் கைதி உடையை அணிந்து சிறைக்கு செல்ல தயாரானார்.
அப்போது வனிதா, இந்த போட்டியில் கவின் பங்கேற்கவில்லை என்று கூற, கவினும் அதனை ஏற்றுக் கொண்டார்.