‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா, சிம்ரன், கைரா அத்வானி இல்லை: ராகவா லாரன்ஸ் அதிரடி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ’சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது

நடிகர் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதனை தனது டுவிட்டரில் உறுதி செய்ததோடு, இந்த படத்தில் தானும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தெரிவித்திருந்தார்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்குவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரான ’சந்திரமுகி’ கேரக்டரில் ஜோதிகா நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளிவந்தது. அவருக்கு பதிலாக சிம்ரன், அனுஷ்கா, கைரா அத்வானி உள்பட பலர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் ’சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா, சிம்ரன், அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பொய்யானது என்றும் இந்த படத்தின் நாயகி யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

எனவே இது குறித்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விரைவில் இந்த படத்தின் நாயகி யார் என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்