ஃபாத்திமா பாபுவைத் தொடர்ந்து வெளியேறப் போவது யார்?

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். போன வாரம் ஃபாத்திமா பாபு முதலாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பள்ளி ஆசிரியர் போல அனைவருக்கும் பாடம் நடத்தினார். 

சனி, ஞாயிறுகளில் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வாரத்தில் நடந்த பிரச்னைகளை பற்றி பேசி முடித்து அறிவுரை கூறுவார். அத்துடன் அந்த வாரத்தில் வெளியேறப் போவது யார் என்று குறித்தும் கூறுவார். 

ஃபாத்திமாவைத் தொடர்ந்து வெளியேறப் போவது யார்?


நேற்று முதல் பிரச்சினையாக வனிதா- தர்ஷன் பிரச்சினை சென்றது., அடுத்து லோஸ்லியாவின் செல்லப்பிராணி மைனம்மா கதை, சாண்டியின்  குத்துப் பாடல் என ரணகளமாக போனது பிக் பாஸ்.

இதற்கிடையில் மோகன் வைத்யா எலிமினேட் ஆகவுள்ளதாக கமல் ஒரு சிறு நாடகம் செய்ய, அவர் அனைவைரையும் கட்டிப்பிடித்து அழுது விடைபெற்றுக் கொண்டிருந்தார். பின்னர் நீங்கள் எலிமினேட் ஆகவில்லை இது ஒரு ப்ராங்க்தான் என கமல் கூறினார்.

மோகன் வைத்யா எலிமினேட் ஆகவில்லை என்று தெளிவாக தெரிந்துவிட்டது. அப்போ ஃபாத்திமா பாபுவைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப் போவது மீராவா? மதுமிதாவா? வனிதாவா? சரவணனா? என்று ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.