ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய ராணுவத்தில் தோனி எங்கு கொடியேற்றுவார்?

இந்திய அணியின் முன்னணி வீரராகவும், ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்டவராகவும் இருப்பவர் மகேந்திர சிங்க் தோனி அவர்கள் தான்.

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றி வாய்ப்பினை இழந்தது. அப்போது இந்திய அணி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது; இந்திய அணி மட்டுமல்லாது, இந்திய வீரர்களும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகினர், அதில் ஒருவர் தோனி அவர்கள், அவருடைய வித்தியாசமான அதாவது மெதுவான ஆட்டம் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய ராணுவத்தில் தோனி எங்கு கொடியேற்றுவார்?

உலகக் கோப்பை முடிந்ததும், தோனி ஓய்வு பெறுவார் என்று பல வதந்திகள் கிளம்பின, ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார் தோனி, பின்னர் இவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட மாட்டார் என்று மட்டுமே கூறப்பட்டது.

ஓய்வினைப் பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், தோனி ராணுவத்தில் குறுகிய காலம் பணியாற்றுவதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.

இரண்டு மாத பயிற்சி காலத்தில் தற்போது இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

தோனி தற்போது காஷ்மீர் பகுதியில் இருந்து நாளை இந்திய எல்லைப்பகுதியான லே பகுதியை நோக்கி பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தோனி லே பகுதியில் இந்திய நாட்டின் மூவண்ண கொடியை ஏற்றி இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்க்க உள்ளார்.

இதுபற்றிய அதிகாரப் பூர்வத் தகவலை எதிர்பார்த்து  தோனி ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.