Connect with us

இனி GPay தேவையில்லை. வந்துவிட்டது வாட்ஸ்அப் Pay!

செய்திகள்

இனி GPay தேவையில்லை. வந்துவிட்டது வாட்ஸ்அப் Pay!

பண பரிமாற்றம் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் வந்துவிட்ட நிலையிலும் பெரும்பாலும் பொது மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்துவது கூகுள் பே என்ற GPay தான் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் GPayக்கு போட்டியாக தற்போது வாட்ஸ்அப் பண பரிவர்த்தனை செயலி வந்துவிட்டது. ஏற்கனவே பொழுதுபோக்கு மற்றும் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தப்படும் நம்பர் ஒன் செயலியாக வாட்ஸ்அப் இருந்துவரும் நிலையில் தற்போது புதிய அம்சமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது

இருப்பினும் தற்போது பிரேசில் நாட்டில் மட்டும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வசதியின் படி உள்ளூர் கடைகளில் பட்டியலைப் பார்க்கவும் பொருட்களை வாங்கிய பின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது

மேலும் பணம் பரிவர்த்தனையின்போது மோசடிகளை தவிர்க்கும் வகையில் 6 இலக்க கடவு எண் அல்லது கைரேகை பாதுகாப்பையும் இந்த பண பரிவர்த்தனை செயலியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது GPayக்கு போட்டியாக வாட்ஸ்அப் பணபரிவர்த்தனை செயலியும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Continue Reading
To Top