அட்லிக்கு டாட்டா காட்டிவிட்டாரா விஜய்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி மற்றும் ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களுமே மற்ற தமிழ்ப்படங்களின் காப்பி என்ற குற்றச்சாட்டுக்கள் விஜய்யை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. விஜய் டிவி தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் ஒரு ரசிகை இனிமேலாவது வித்தியாசமான வேடங்களில் நடியுங்கள் விஜய் என்று வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு அவரது படங்கள் உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் விஜய் படத்தை இயக்க அட்லி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கதையை கூட கேட்க விரும்பாத விஜய், மூன்று வருடங்கள் கழித்து பார்க்கலாம் என்று டாட்டா காண்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

விஜய் இல்லாமல் அட்லி இயக்கும் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை என்பதால் அட்லியின் அடுத்த பட அறிவிப்பு தாமதம் ஆகிவருவதாகவும் கூறப்படுகிறது.