Connect with us

கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு எம்எல்ஏ: அதிர்ச்சித் தகவல்

செய்திகள்

கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு எம்எல்ஏ: அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாமர மக்கள் மட்டுமன்றி பதவியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு ஒருசில உயிரிழப்பை ஏற்படுத்தி வருவது குறித்த அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் கோஷ் என்பவர் சமீபத்தில் குறைவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சற்று முன்னர் வெளியான தகவல் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேற்குவங்கத்தில் கொரோனாவால் பலியான முதல் எம்.எல்.ஏ இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 14,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 569 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும், 8,687 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top