வால்ட் டிஸ்னி தயாரித்துள்ள அலாவுதீன் படம்

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை நாம் அறியாததல்ல. புகழ்பெற்ற அரபு நாட்டு கதை அது. தமிழில் கூட இப்படம் வெளிவந்தது அலாவுதீனாக கமலஹாசனும், பூதமாக காலம் சென்ற மறைந்த நடிகர் அசோகனும் நடித்திருந்தனர். ரஜினிகாந்தும் நடித்திருந்தார். அந்த நேரத்தில் நன்றாக ஓடிய படமிது.

ஆனால் வால்ட் டிஸ்னி தயாரித்துள்ள புதிய அலாவுதீன் படத்தின் டிரைலர் வெளியாகி உலகம் முழுவதும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு காரணமாக கருதப்படுவது இதில்  பிரமிக்க வைக்கும் அனிமேஷன் காட்சிகள் ,மறைந்த ராபின் வில்லியம்சின் கற்பனையான மாய விளக்கில் இருந்து வெளியே வந்த  பூதத்திற்கு அபாரமான திரைவடிவம் அளித்துள்ளது.

மேனா மசூத் அலாவுதீனாகவும் இளவரசி ஜாஸ்மினாக நவோமி ஸ்காட்டும் நடித்துள்ளனர் இரண்டு பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இப்படம் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியாகிறது.

கோடை விடுமுறையை ஒட்டி இப்படம் வெளியாக இருப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவர்.