பண்புக்கு இலக்கணம் ரஹ்மான் விவேக் புகழாரம்

இளையராஜாவின் இசை சாதனையை பாராட்டும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களால் மிகப்பெரும் அளவில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு 75 வயதாவதால் நிகழ்ச்சிக்கு இளையராஜா75 என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இளையராஜாவுடன் மேடையேறிய ரஹ்மான் மூன்றாம் பிறையில் இருந்து அவருடனான அனுபவங்களையும் இளையராஜாவுடன் பணிபுரிந்ததையும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் தனது ஹெட்மாஸ்டர் என்ற வகையில் கருத்து கூறினார்.

இதற்கு விவேக் தனது டுவிட்டரில் ரஹ்மானை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இளையராஜா ஹார்மோனியத்தில் பிறந்தவை, நம் ஹார்மோன்களில் கலந்து விட்டனவே!! (உலகப் புகழ் பெற்ற பின்னும், மேடை ஏறி ராஜா சார் தன் தலைமை ஆசிரியர் போன்றவர் என்று கூறியது ரஹ்மான்அவர்களின் பண்புக்கு ஒரு சான்று)”பெருக்கத்து வேண்டும் பணிதல்”-குறள் என்று விவேக் கூறியுள்ளார்.