மயில்சாமி வீட்டில் எம்.ஜி.ஆர் படம் திறந்து வைத்த விவேக்

விவேக்கும் மயில்சாமியும் இணைந்து பல படங்களில் காமெடி செய்திருக்கிறார்கள். இவர்கள் இணைந்து காமெடி செய்த தூள் காமெடியை மறந்திருக்க முடியாது.

சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் இருந்து மயில்சாமியும், விவேக்கும் நண்பர்கள் ஆவார்கள்.

மயில்சாமி தீவிர எம்.ஜி.ஆர் பக்தர் ஆவார். அதிமுக கட்சியிலும் உறுப்பினராக இருந்தவர்.

இன்று ஜனவரி 17 எம்.ஜி.ஆர் பிறந்த தினமாகும். இதை அவரது ரசிகர்கள், அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தீவிர எம்.ஜி.ஆர் பக்தரான மயில்சாமி தன்னுடைய வீட்டிலேயே பெரிய எம்.ஜி.ஆர் படம் வைத்து தனது நண்பரான நடிகர் விவேக்கை வைத்து திறக்க சொல்லி இருக்கிறார்.

இதை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விவேக்