மீண்டும் வெள்ளைப்பூக்கள் இயக்குனரின் படத்தில் விவேக்

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் வெள்ளைப்பூக்கள். சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தின் க்ளைமாக்ஸ் யாராலும் கணிக்க முடியாத அளவில் இருந்தது. முழுக்க முழுக்க அமெரிக்க தமிழர்கள் இணைந்து தயாரித்த படம்.

அமெரிக்காவிலேயே இப்படம் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விவேக் இந்த படத்தில் வயதான கதாபாத்திரத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் துப்பறியும் அதிகாரியாக நடித்திருந்தார்.

விவேக் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல் ஆகும். இந்நிலையில் ரசிகர் ஒருவர் விவேக்கிடம் அடுத்த படம் இது போல் எப்போது நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் அடுத்த படமும் இது போல துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லர்தான் வெள்ளைப்பூக்கள் இயக்குனர் விவேக் இளங்கோவனே ஸ்க்ரிப்ட் ரெடி செய்துள்ளார் என பதில் கொடுத்துள்ளார் விவேக்.