திடீரென தனுஷை புகழ்ந்த விவேக்

நடிகர் விவேக் தனுஷ் கூட்டணி எப்போதும் புகழ்பெற்ற கூட்டணி, 2008ல் வந்த படிக்காதவன் படத்தில் இருந்து இவர்களது கூட்டணி தமிழ் சினிமாவில் புகழ்பெற்றது. வடிவேலு, பார்த்திபன் கூட்டணி போல இதுவும் ஒரு முக்கியமான காமடி கூட்டணியாக விளங்கியுள்ளது தமிழ் சினிமாவில்.

விவேக் தனுஷ் நடிப்பில் வந்த வேலையில்லா பட்டதாரியாகட்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து காமெடியில் கலக்கிய தனுஷின் உத்தமபுத்திரன் ஆகட்டும் விவேக்கின் காமெடியை அதிக அளவில் வெளிப்படுத்த உதவியது இந்தப்படங்கள். உத்தமபுத்திரன் படத்தில் இடைவேளைக்கு பிறகுதான் விவேக் வருவார். இடைவேளைக்கு பிறகு முழு நீள நகைச்சுவைப்படமாக அது மாறும்.

இதை இன்று திடீரென தான் வெளியிட்டுள்ள டுவிட்டில் நினைவு கூர்ந்துள்ளார் விவேக்.
தனுஷ் அவர்களுக்கு மிகவும் பிடித்த காமெடியன் நான். அவர் படங்கள் எல்லாவற்றிலும் என்னை மிகச் சிறப்பாகவே பயன்படுத்தியிருப்பார் என்று கூறியுள்ளார்.