பிரபல பத்திரிக்கையை கண்டித்த விவேக்

பிரபல தினசரி தினகரன் ஆகும். தேர்தல் நேரத்தில் பல அதிரடி செய்திகளை அனைத்து வார, தின, மாத இதழ்கள் வெளியிட்டு வரும் நிலையில் ஏதாவது பரபரப்புக்குள்ளாகி விடுகிறது.

அந்த அடிப்படையில் தினகரன் வெளியிட்ட ஒரு செய்தியை நடிகர் விவேக் மறுப்பு தெரிவித்து கண்டிக்கும் அளவுக்கு போய் உள்ளது.

அந்த செய்தி விவேக் அமமுகவில் சேர இருக்கிறார் என்பதே.

விவேக் அமமுகவில் சேர இருந்ததாகவும் அதை விவேக் மறுத்து விட்டதாகவும் செய்தியை வெளியிட்டது.

இதற்கு விவேக் அளித்துள்ள பதில்.

அன்பிற்குரிய தினகரன் பத்திரிக்கை நிருபருக்கு. இன்று நீங்கள் வெளியிட்ட செய்தி கொஞ்சம் சரி கொஞ்சம் தவறு. அமமுக என்னை அழைத்து நான் மறுத்ததாக வந்த செய்தி தவறு.ஆனால் நான் பொதுவானவன் என்பது சரி. டிடிவி உட்பட அனைத்து தலைவர்களும் என் நண்பர்களே.

இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.