மீண்டும் விஸ்வாசம், பேட்ட போட்டியில் ரசிகர்கள்

கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. அதே பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம். இந்த படத்துக்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அஜீத்துக்கு டிஜிட்டலில் பேனர் எல்லாம் வைத்து அசத்தி இருந்தார்கள்.

மேலும் டுவிட்டரில் பேட்ட படத்தை சரியாக ஓடாத படமென்று கடுமையான முறையில் விமர்சனம் செய்து வந்தார்கள். சமூக வலைதளங்களில் எங்கள் படம்தான் சிறந்தது என்ற வகையில் இருவரின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர்.

இரண்டு மாதங்கள் முடிந்த பிறகு கடந்த ஏப்ரல்14 தமிழ் புத்தாண்டு அன்று சன் டிவியில் பேட்ட படம் ஒளிபரப்பானது. அதை பார்த்த பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அன்று நடந்த ஐபிஎல் போட்டியையும் பார்த்து தலைவர் மற்றும் தலயை பார்ப்பதில் மகிழ்ச்சி என்ற வகையில் ரஜினியையும், தோனியையும் குறிப்பிட்டிருந்தார்.

இதை சரியாக கவனிக்காத ரசிகர்கள் மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு
பேட்ட படத்துடன் வெளியான விஸ்வாசம் படத்தின் வசூலோடு ஒப்பிட்டு யார் சிறந்தவர்கள் என்று பட்டியலிட்டு வருகின்றனர். மேலும் ஒருசிலர் ஆபாசமாக சண்டையிட்டும் வருகின்றனர்.