Connect with us

யோகிபாபுவின் 100வது படம் எது தெரியுமா?

பொழுதுபோக்கு

யோகிபாபுவின் 100வது படம் எது தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட யோகிபாபு, தற்போது ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகிபாபுவின் 100வது படம் அஜித் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
சுப்பிரமணிய சிவா இயக்கிய ‘யோகி படத்தில் அறிமுகமாகிய பாபு, பின்னர் தன்னுடைய பெயரை ‘யோகிபாபு’ என்று மாற்றிகொண்டார் என்பதும் பெயர் மாற்றத்திற்கு பின்னர் அவருடைய மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
அஜித்தின் ‘விசுவாசம்’ தனது 100வது என்பதில் தனக்கு பெருமை என்றும் யோகிபாபு கூறியுள்ளார். அவருக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Continue Reading

அதிகம் படித்தவை

To Top