Connect with us

விஷால் சுந்தர்சி இணையும் ஆக்சன் படம் எப்படி இருக்கும்

பொழுதுபோக்கு

விஷால் சுந்தர்சி இணையும் ஆக்சன் படம் எப்படி இருக்கும்

இயக்குனர் சுந்தர் சியும் விஷாலும் ஆம்பள, மதகஜராஜா உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கின்றனர். இதில் பயங்கர நகைச்சுவைப்படமான மதகஜராஜா சுருக்கமாக எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்டது.

இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. 5வருடங்களுக்கும் மேலாகியும் இப்படம் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் ஆம்பள மட்டுமே வந்து வெற்றி பெற்றது. அடுத்ததாக ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு ஆக்சன் என்ற படத்தை இயக்குகிறார் சுந்தர் சி. இந்த படத்தின் செகண்ட் லுக் கடந்த மாதம் வெளியிடப்பட்டது

பொதுவாக நடிகர்களின் படங்களை ஆக்சன் படம் என்று சொல்வோம். இதில் படத்தின் தலைப்பே ஆக்சன் என வைத்திருப்பதால் விஷாலின் இந்த ஆக்சன் படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பொதுவாக சுந்தர்சியின் படங்களில் நகைச்சுவை காட்சிகள் தூக்கலாக இருக்கும். முழுநீள நகைச்சுவை காட்சிகளாக இருக்கும். ஆக்சன் படமாக இருந்தாலும் நகைச்சுவை காட்சிகளுக்கென்று தனியாக காட்சிகள் வைத்திருப்பார். இதிலும் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top