காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்தில் விஷால்

நடிகர் சங்கத்தில் இதற்கு முன் சரத்குமார், ராதாரவி போன்றோர் தலைவர்களாக இருந்திருக்கின்றனர். சென்னையில் காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் வரும் 23 செண்ட் நிலம் ஒன்றை சரத்குமார் , ராதாரவி போன்றோர் விற்றதாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விஷால் நடிகர் சங்க தலைவராக இருந்து வருகிறார். வருகின்ற தேர்தலிலும் விஷால் போட்டி இடுகிறார். இந்நிலையில் பழைய வழக்கான இந்த 23 செண்ட் இடம் தொடர்பான வழக்குக்காக தற்போதைய நடிகர் சங்கத்தலைவரான விஷால் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கமளித்தார்.