Connect with us

விஷால் நடிக்க வந்து 15 வருஷம் ஆச்சாம்

பொழுதுபோக்கு

விஷால் நடிக்க வந்து 15 வருஷம் ஆச்சாம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இன்று விஷாலுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய், அஜீத் படத்துக்கு பிறகு இன்று விஷால் படத்துக்கு என்று ஒரு நல்ல ஓப்பனிங் உள்ளது.

அதற்கு காரணம் விஜய், அஜீத் நடிக்கும் ஆக்சன் படங்களை போன்று விஷாலும் அதிரடி ஆக்சன் களத்தில் குதித்ததுதான்.

விஜய்யோ அஜீத்தோ நடிக்க வந்து 24, 25 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர் வந்து குறுகிய நாளிலேயே முன்னணி ஆக்சன் ஹீரோ அந்தஸ்தையும் பிடித்துவிட்டார்.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் காந்தி கிருஷ்ணா இயக்கிய கடந்த 2004ல் வெளியான செல்லமே படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். முதல் படமே நன்றாக அமைந்தது.

தொடர்ந்து சண்டக்கோழி திரைப்படம் இவரது ஆக்சன் படங்களின் அடித்தளமாக அமைந்தது, பாண்டியநாடு, திமிரு,பாயும்புலி என பலதரப்பட்ட ஆக்சன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக விளங்குகிறார். நடிகர் சங்கத்தலைவராகவும், தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

சினிமா முன்னணி தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் மகன் இவர்.

விஷால் இன்றுடன் வெற்றிகரமாக 15வது வருடத்தை சினிமாவில் தொடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top