விருந்தில் சாப்பிட்ட இலையை எப்படி மடிக்கனும்ன்னு தெரியுமா?!


பொதுவா வாழை இலையில் சாப்பிடுவது என்பது உடலுக்கு நல்லது. வாழை இலை அடியில் முத்தி இருக்கும். இலையின் நுனி பாகம் இடது கை பக்கமாகவும், அடிபாகம் வலது கை பக்கம் இருக்குமாறும் போடனும்.

ஏன் அவ்வாறு போடுகிறார்கள்?

நுனி இடது பக்கம் இருக்குமானால் நாம் சாப்பிடும் பக்கம் முத்தி இருக்கும்.எதிர்பக்கம் இளம் இலையாக இருக்கும். இந்த மாதிரி வைத்துசாப்பிடும்போது நமது கை நகம் பட்டு இலை அவ்வளவு சீக்கிரம் கிழியாது.இதுவே எதிர்புறம் என்றால் இளம் இலை வெகு சீக்கிரம் கிழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். மேலும் எதிர புறம் சுருட்டிக்கொண்டும் இருக்கும் . மேலும் இலையில் ஓடும் நரம்புகள் நமது வலது கை பழக்கத்திற்கு ஏற்ற மாதிரி இருக்கும்.நாம் பொதுவாக நமது வலது கையால் சாப்பிடும்போது உணவை வலது பக்கமாக சுழற்றி எடுத்துதான் சாப்பிடுவோம். அவ்வாறு சாப்பிடும்போது இலையின் நரம்புகள் நமது விரல்கள் சுழலும் திசைக்கு வாட்டமாக இருக்கும்.இலை கிழியாது.
மேலும், நாம் உண்ணும் பகுதி முத்தி இருப்பதால் இயல்பாகவே அதற்கு எடை அதிகம்.எதிர் பக்கம் இளம் இலை என்பதால் அதற்கு எடை குறைவு.

இப்ப இலையை எந்த பக்கம் மடிப்பதுன்னு தெரிஞ்சுக்கலாமா?!

நாம் சாப்பிட்டது போக மிச்சம் இருக்கும் உணவு பகுதிகளை இலைக்கு நடுவில் சேகரித்து எதிர்புறம் உள்ள இலையை நம்பக்கம் மடித்தால் குறைவான எடை காரணமாக இலை தூக்காது.இலையில் உள்ள குழம்பு, ரசம், மோர் மாதிரியான பொருட்கள் நம் மீது தெரிக்காது. இப்படி இல்லாம எதிர்புறம் மீதமான உணவுகளை வைத்துவிட்டு நம்பக்கம் இருக்கும் முத்தின இலையை எதிர்புறம் மடித்தால் அது எடை காரணமாக, டெம்பர் காரணமாக நம் மீதே திருப்பி அடிக்கும். இதுதான் அறிவியல் காரணம். மேலும் இலை எடுக்கும்போது நம் விரல்களை இலைக்கு அடியில் உள்ளே விட்டு மேல் பக்கம் கட்டை விரலால் அழுத்தி எடுப்போம். அவ்வாறு எடுக்கும்போது முற்றிய இலை அடியில் இருந்தால் இலை கிழியாமல் வரும்.இலையின் உள்ளே மீதமான உணவுகள் சிந்தாது.

துக்க வீட்டில் இப்படி இலையை மடித்தால் இதுமாதிரியான துக்க நிகழ்ச்சி உங்க வீட்டில் நடந்து, அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கும் துர்பாக்கியம் இனி நேரக்கூடாதென்றும், மனதுக்கு பிடிக்காத நிகழ்ச்சியில் இலையை மறுபக்கமா மடித்தால் உறவை முறிச்சுக்கலாம்ன்னு அர்த்தமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...