விருச்சிகம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019 வருடம் ராகு-கேது பெயர்ச்சி திருக்கணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி நடைபெற இருக்கின்றது. ராகு பகவான் கடகம் ராசியில் இருந்து மிதுனம் ராசியிலும், கேது பகவான் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்ய போகின்றார்கள்.

Viruchigam ragu kethu peyarchi 2019

விருச்சிகம் ராசியினருக்கு இரண்டாம் இடத்தில் இருக்கின்ற கேதுவும், எட்டாம் இடத்தில் இருக்கின்ற ராகுவும் என்ன பலன்களை தரப் போகின்றார்கள் என்பதை விரிவாக காணலாம். இங்கே குறிப்பிடுவது பொது பலன்கள் மட்டுமே, உங்களது சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திகள், கிரக பலம், சேர்க்கை, பார்வை வைத்து பலன்கள் மாறுபடக்கூடும்.

பொதுவான பலன்கள்:

இதுவரை ஒன்பதாம் இடத்தில் இருக்கின்ற ராகு பகவான் உங்களுக்கு நடைபெற வேண்டிய பல வித வாய்ப்புகளையும், காரியங்களையும் தடுத்து கொண்டு இருந்தார். இது தெரியாமல் நீங்கள் உங்கள் மனதிற்குள் எல்லாம் கூடி வருகின்றது கடைசி நிமிடத்தில் ஏன் இவ்வாறு தட்டி போகின்றது என்று நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருந்தீர்கள். வருகின்ற 6-3-2019-ம் தேதி ராகு பெயர்ச்சியாகி மிதுனம் ராசிக்கு வருகின்ற பொழுது உங்களுக்கு நன்மை நடைபெறக்கூடும். தாராளமான பணவரவு உண்டு. பணம் பல வகையில் வரக்கூடும். சுபவிரயச் செலவுகள் ஏற்படக்கூடும்.

உங்களது மகள் அல்லது மகனின் திருமணம் தாமதம் ஆகி கொண்டே இருக்கின்றதே என்று கவலைப்பட்டு கொண்டு இருந்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஒரு நல்ல முடிவு தெரியக்கூடும். தந்தை மற்றும் தந்தை வழி சொந்த பந்தங்களுடன் நல்ல உறவு ஏற்படக்கூடும். வயதான விருச்சிகம் ராசியினர் தாத்தா, பாட்டியாக ஆக  பதவி உயர்வு கிடைக்கும்.

இருக்கின்ற வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது. வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கின்றது. பழைய வீட்டை அல்லது சொத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

இதுவரை மூன்றாம் இடத்தில் அதாவது மகரத்தில் இருந்த கேது பகவான் உங்களுக்கு பல்வேறு நற்பலன்களை கொடுத்து வந்தார். கேது பெயர்ச்சியாகி தனுசு ராசியில் சனியோடு இணைகின்றார். இரண்டாம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் சாமர்த்தியமாக பேசி பல வித காரியங்களை முடித்து காட்டுவீர்கள். நீங்கள் துணிவோடு எடுக்கின்ற முடிவு வெற்றியை கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகலாம். குரு பகவான் அதிசாரமாக தனுசு வீட்டிற்கு வருகின்ற பொழுது மிதுனம் ராசியில் இருக்கின்ற ராகுவை பார்ப்பதால் நிறைந்த தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். படித்து முடித்து சரியான வேலையின்றி இருக்கும் விருச்சிகம் ராசியினருக்கு முயற்சி செய்தால் நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

வியாபாரம் மற்றும் தொழில் விஷயமாக பயணங்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். வியாபாரத்தில் பல வித இடையூறுகளும், சோதனைகளும் சந்திக்க நேரிடும். குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் எதையும் சமாளிக்கின்ற ஆற்றல் பிறக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு  நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்பார்த்த லாபம் உண்டு.

மாணவ – மாணவியர்கள்:

ஆசரியர்கள் மற்றும் மூத்தவர்களின் அறிவுரை கிடைக்கும். குருவின் அருளால் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். கவனத்தை நவீன சாதனங்கள், நண்பர்களுடன் அரட்டை என்று  சிதறவிடாமல் படிப்பின் மீது அக்கறை காட்டுங்கள். மேற்படிப்பு படிப்பதற்கான கல்வி கடன் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும்.

குடும்பம்:

விருச்சிகம் ராசியினர் உற்சாகமாக காணப்படுவார்கள். இதுவரை இல்லத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவு, தேவையற்ற மனக்குழப்பங்கள், விரோதம் நீங்கி இணக்கம் உண்டாகும். உங்களின் மேன்மையை புரிந்து கொள்ளாமல் விலகி சென்ற சொந்த பந்தங்கள் மீண்டும் இணைவார்கள். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் கைக்கூடும்.

உடல்நலம்:

கண், மூட்டு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் நலனில் சிறிது அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய வருடமாக இருக்கப் போகின்றது.

வணங்க வேண்டிய தெய்வம்:

இல்லத்தில் சுப காரியத் தடைகள் நீங்க உங்களது குலதெய்வத்தையும், முன்னோர் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.