பெங்களூர் அணியில் ஒரு சாதனை ஒரு சோதனை!

மும்பை அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையே ஐபில் தொடரின் ஏழாவது போட்டி பெங்களூரில் நடைப்பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 187 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Royal challengers bangalore

சாதனை:

இந்தப் போட்டியில் விராட் கோலி 46 ரன்கள் எடுத்தார். அதோடு ஐபில் தொடரில் 5,000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த சாதனை எட்டிய முதல் வீரர் சுரேஷ் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை:

இப்போட்டியில் பெங்களூர் அணி வெற்றிப் பெற கடைசிப் பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இருப்பினும் கடைசிப் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. ஆனால் அது நோ பால் என்பதை கவனிக்காத அம்பயர் போட்டியை முடித்துவிட்டார். கடைசிப் பந்தை வீசிய ரசித் மலிங்கா கீரிஸை தாண்டியது ரீப்ளேவில் தெரிந்தது. ஒருவேளை அம்பயர் கவனித்திருந்து நோ பால் கொடுத்திருந்தால் பெங்களூர் அணிக்கு வெற்றி கிடைத்திருக்கலாம்.