ஐம்பாதாயிரம் வரை சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை!

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Villupuram district court jobs 2019

அலுவலக உதவியாளர் 30 காலி பணியிடங்கள், பதிவறை எழுத்தர் 8 காலி பணியிடங்கள், இரவுக் காவலர் 11 காலி பணியிடங்கள், துப்புரவாளர் 3 காலி பணியிடங்கள் என மொத்தம் 52 காலி பணியிடங்கள் உள்ளன.

அலுவலக உதவியாளருக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவறை எழுத்தருக்கு 10ம் வகுப்பும், இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு.

ரூ. 15,900 முதல் 50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 18, 2019ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணபிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20-%20CJM%20Court.pdf இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.