விளக்கு துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை?

பொதுவாக வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். தினம்தோறும் விளக்கேற்றும் பொழுது இரண்டு திரி இரண்டு முகமாக விளக்கு ஏற்றுவது நன்மை உண்டாகும்.
ஏதேனும் விசேஷம் அல்லது பண்டிகை காலங்களில் ஐந்து முகம் திரி கொண்டு விளக்கேற்றினால் பலன்கள் அதிகம் கிடைக்கும்.

விளக்கு துலக்கும் நாட்கள்

செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை விளக்கை துலக்கி வைக்க கூடாது. அன்றைய நாட்களுக்கு முன்பே விளக்கு மற்றும் பூஜை சாமான்களை துலக்கி வைத்து கொள்ள வேண்டும். அன்றைய இரு தினங்களில் லட்சுமி, குபேரர் கூடி இருப்பதாக ஐதீகம். எனவே திங்கட்கிழமை, வியாழக்கிழமை விளக்கை துலக்கி வைத்து விட வேண்டும்.

விளக்கு ஏற்றும் எண்ணெய்கள்

விளக்கில் நெய்தீபம் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் நினைத்த காரியம் கைக்கூடும்.

விளக்கு ஏற்றும் நேரம்

அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை அறையில் கோலமிட்டு அதன் மேல் விளக்கேற்றி வைக்கலாம். குறிப்பாக குத்துவிளக்கில் ஏற்றி வழிபட்டால் ஜோதிக்கே ஜோதி ஆகி வீட்டில் ஏற்படும் துன்பங்களை அகற்றும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews