Connect with us

விக்ரம் 60’ படத்தின் வில்லன் யார்? ஆச்சரிய தகவல்

பொழுதுபோக்கு

விக்ரம் 60’ படத்தின் வில்லன் யார்? ஆச்சரிய தகவல்

சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் 60வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதுமான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் 60வது படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து முதல் முதலாக நடிக்க உள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்தில் விக்ரம் தான் வில்லன் என்றும் துருவ் விக்ரம் தான் நாயகன் என்றும் கூறப்படுகிறது. வில்லனாக நடிக்க விக்ரம் தனது உடல் அமைப்பை வித்தியாசமான முறையில் மாற்றம் செய்ய இருப்பதாகவும் இதுவரை இல்லாத வகையில் அவர் புதிய தோற்றத்தில் இந்த படத்தில் தோன்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக நயன்தாராவும் துருவ் விக்ரம் ஜோடியாக புதுமுக நடிகை ஒருவரும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரமுடன் ஏற்கனவே நயன்தாரா ’இருமுகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Continue Reading
To Top