Connect with us

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விஜய்சேதுபதி:

பொழுதுபோக்கு

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விஜய்சேதுபதி:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய்சேதுபதியும் இணைந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கின்றாரா? அல்லது ரஜினிக்கு உதவும் கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

ரஜினி-விஜய்சேதுபதி முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதால் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top