பிரதமர் மோடி குறித்து விஜயசாந்தி சர்ச்சை பேச்சு

தெலங்கானா மாநிலம் ஷாம்சாபாத் நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் எம்.பி.யுமான விஜய சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது விஜய சாந்தி பேசியதாவது:

பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற அதிர்ச்சி வெடிகுண்டுவை எந்த நேரத்தில்,எப்போது வீசுவார் என்பது தெரியாமல் மக்கள் அவரைப் பார்த்து அச்சப்படுகின்றனர்.

இந்த மக்களவைத் தேர்தல் பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் போர்.

பிரதமர் மோடி தீவிரவாதியைப் போல் இருக்கிறார். சாமானிய மக்களிடத்தில் அன்பைப் பொழிவதற்குப் பதிலாக அவர்களை அச்சுறுத்துகிறார். ஒரு பிரதமர் இதுபோன்று செயல்படக்கூடாது