Connect with us

தந்தை விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்ததாக நடிகை வனிதா அதிரடி கைது

பொழுதுபோக்கு

தந்தை விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்ததாக நடிகை வனிதா அதிரடி கைது

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், தமிழில் சந்திரலேகா, மாணிக்கம் படங்களில் நடித்திருக்கிறார் இவருக்கும் இவரது தந்தை விஜயகுமாருக்கும் சொத்து ரீதியான பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது.

விஜயகுமார் வீட்டின் முன் தர்ணா உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வருகிறார் வனிதா. சமீபத்தில் இது போல பிரச்சினைகள் கொஞ்சம் அதிகமாகி வந்தது.

இந்த நிலையில்

வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக நடிகை வனிதா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. இதை அவரது மகள் வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்தினார் பின்பு அதை காலி செய்ய மறுக்கவே விஜயகுமாருக்கும் வனிதாவுக்கும் தகராறு ஏற்பட்டது

இதுகுறித்து விஜயகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் தனது உயிருக்கு ஆபத்து என்று வனிதாவும் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

புகாரை விசாரித்து வந்த போலீஸ் இன்று வனிதாவை கைது செய்து உடனே விடுவித்தது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top