Connect with us

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருமண நாள் அமெரிக்காவில் கொண்டாட்டம்

பொழுதுபோக்கு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருமண நாள் அமெரிக்காவில் கொண்டாட்டம்

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இதனால் விஜயகாந்த் ரசிகர்கள், மற்றும் தொண்டர்கள் சோர்வுடன் உள்ளனர்.

விஜயகாந்த் சில மாதங்களாக அமெரிக்காவில் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரது திருமணத்தை நடத்தி வைத்த மூத்த தலைவர் கலைஞர் அவர்களின் இறப்புக்கு கூட விஜயகாந்தால் வர முடியாத நிலை. சில வாரங்கள் கழித்து அவரது சமாதிக்கு சென்று அழுது கொண்டே அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் தொடர் சிகிச்சையில் அமெரிக்காவில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இன்னும் சில வாரங்களில் ஊர் திரும்புவார் என கூறப்படுகிறது.

அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

எல்லா விழாக்களையும் அமெரிக்காவில் இருந்தபடியே கொண்டாடி வரும் விஜயகாந்த், கிறிஸ்துமஸ், நியூ இயர் விழாக்களை கொண்டாடியபடியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வந்தது.

இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு திருமணம் கண்ட விஜயகாந்த்- பிரேமலதா இருவரும் மற்றும் அவர்களின் மகன் உட்பட விஜயகாந்தின் திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடியதை புகைப்படமாக வெளியிட்டுள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top