நடந்ததை மறைத்த விஜய் தொலைக்காட்சி…!!! என்னதான் நடந்தது?

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் சீசன் 3 யை கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இரண்டாவது வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரம் சென்று கொண்டிருக்கையில், ஞாயிற்றுகிழமை ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே வெளியேறுவதற்குத் தயாராக இருந்த ஃபாத்திமா பாபு, கமல் ஹாசனை சந்தித்து பேசினார்.

நடந்ததை மறைத்த விஜய் தொலைக்காட்சி…!!! என்னதான் நடந்தது?

அதைவிட அவர் வெளியே வந்து கூறிய தகவல்கள் தான் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்வகையில் உள்ளது, அதாவது ‘அந்த வீட்டில் அபிராமியின் செயல்பாடுகள் நார்மல் ஆகவே இல்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், மூன்று நாட்களாக அழுத வண்ணமே இருந்தார். அவர் மதுமிதாவுக்கு வாக்களிக்காமல் மீராவிற்கு வாக்களித்த்தால் அவர் நண்பர்கள் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.

அதனால் மனம் நொந்த அவர், அவரை அவரே நகத்தை வைத்து காயப்படுத்திக்கொண்டார், நான் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று அழுதார்.

பிறகு நான் அவரை சமதானப்படுத்த, பிறகு சைக்கார்டிஸ்ட் ஒருவர் வந்து பேச, நான் சரியாகிவிட்டேன் என்றார்’ என பாத்திமா கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சி இந்த விஷயத்தினை மறைத்ததிற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.