சிந்துபாத்துக்கு பிறகு சேதுபதி 2வா?

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த படம் சேதுபதி. விஜய் சேதுபதி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருந்தார். ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.

அருண்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார். இதுவரை அருண்குமார் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றது.

இந்நிலையில் சிந்துபாத்துக்கு பிறகு இந்த கூட்டணியின் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருப்பதாக சொல்லப்படுகிறது.

காக்கி சட்டையில் விஜய் சேதுபதியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.