விஜய்சேதுபதியின் புதிய படம் க/பெ ரணசிங்கம்

விஜய் சேதுபதி தற்போது புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தின் பெயர் க/பெ ரணசிங்கம். விருமாண்டி என்பவர் இயக்குகிறார்.

இயக்குனர் பெயரை வைத்தே கணித்து விடலாம் இது மதுரை சுற்றுவட்டார படம் என்பதை.

உண்மைதான் மதுரை சுற்றுவட்டாரத்தில்தான் இப்படம் தயாராக உள்ளது. நேற்று இப்படத்தின் பூஜை போடப்பட்டது.

ஐஸ்வர்யா ராஜேஸ், பவானி ஸ்ரீ போன்றோர் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கிராமத்து பாணியில் விறுவிறுப்பாக தயாராக இருக்கும் இப்படம் விரைவில் ஷூட் முடிந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜேஆர் ஸ்டுடியோ இப்படத்தை தயாரிக்கிறது.