Connect with us

இயக்குனருக்கு பைக் பரிசளித்த விஜய் சேதுபதி

பொழுதுபோக்கு

இயக்குனருக்கு பைக் பரிசளித்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் 96 நீண்ட நாள் கழித்து இப்படியொரு அற்புத படத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்துதான் போனார்கள்.

இளவயது ஞாபகங்களை மீட்டெடுக்கும் அற்புதமான கதை, த்ரிஷாவும் நீண்ட நாளைக்கு பிறகு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் நின்றார்.

இப்படத்தின் இயக்குனர் பிரேம் பைக் ப்ரியராம் அதனால் 96 என்று முடியும் ரிஜிஸ்ட்ரேஷனோடு சேர்த்து அவருக்கு பைக் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்த பைக்கின் மதிப்பு மூன்று லட்சம் ரூபாயாம் இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார் இயக்குனர் பிரேம்.

Continue Reading
To Top