விஜய் சேதுபதியின் 33வது படம்

விஜய் சேதுபதியின் 33 வது பட பூஜை இன்று நடந்தது. நாளுக்கு நாள் விஜய் சேதுபதியின் படங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. அந்தக்காலத்து நடிகர் மோகன் போல அதிக படங்களில் நடித்து கொண்டே இருக்கிறார்.

இரண்டு நாட்கள் முன்புதான் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிக்கும் பட பூஜை இராமநாதபுரம் பரமக்குடியில் நடந்தது. அதற்குள்33 வது படத்திற்கான பூஜை இன்று தொடங்கியது.

இயக்குனர் ஜனநாதன் துவக்கி வைத்தார். இன்னும் இப்படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை ரோக்நாத் என்பவர் இயக்குகிறார். சந்ரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்துள்ளார்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.