விளையாட்டு பயிற்சியாளராக கெத்து காட்டும் விஜய்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாம் படமிது. ஏற்கனவே மெர்சல், தெறி படங்களில் விஜய் நடித்துள்ளார்.

இப்போது அட்லி இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இப்படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.
இதற்காக பிரத்யேக பயிற்சியாளர் மூலம் அவரது உடலமைப்பு மாற்றப்பட்டு வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். கலை இயக்குநர் முத்துராஜ், படத்துக்கான செட் வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

வரும் 20-ம் தேதி பூஜை போடப்பட்டு, 21-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ வரிசையில், இதுவும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

நயன் தாரா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்கிறார்.