விஜய் படத்தின் அடுத்த ஹீரோயின்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. அடுத்ததாக விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் படம் நடிக்க இருக்கிறார்.

லோகேஷ் தற்போது கார்த்தியை வைத்து கைதி படம் இயக்கி வருகிறார். விஜய் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா மற்றும் மூத்த நடிகர் அர்ஜூனும் முக்கிய வேடத்தில் இணைந்து நடிக்கிறாராம்.