விஜய் புதிய படத்தின் கதாபாத்திர பெயர் மைக்கேலா

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது தடவையாக அட்லியுடன் இணைந்துள்ள விஜய் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். . இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லுக்கு பிறகு மீண்டும் இதில் விஜய் ஜோடியாகி உள்ளார்.

கதிர், விவேக், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

ஏ.ஆர் ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்க தீபாவளிக்கு இப்படத்தை கொண்டு வர முயற்சி நடக்கிறது.

 இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பதாகவும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.