Connect with us

ரொம்பவும் சிம்பிளான கெட்டப்பில் போட்டோஷுட் நடத்தியுள்ள விஜே சித்ரா!!

பொழுதுபோக்கு

ரொம்பவும் சிம்பிளான கெட்டப்பில் போட்டோஷுட் நடத்தியுள்ள விஜே சித்ரா!!

தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகையாக விஜே சித்ரா வலம் வருகிறார். 2013 ஆம் ஆண்டு சட்டம் சொல்வது என்ன? என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் பல நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சி, ஜீ தமிழ், விஜய், வேந்தர் தொலைக்காட்சி என பல சேனல்களில் தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் இவர் மன்னன் மகள் சீரியலின் மூலம் சீரியலில் கால் பதித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நிகழ்ச்சி பெரிய அளவில் பெயர் பெற்றுக் கொடுத்தது.

வேலுநாச்சி மற்றும் சரவணன் மீனாட்சி 2 போன்ற சீரியலில் இவரது நடிப்பு அடுத்தகட்டத்திற்குச் சென்றது. தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பக் கதையாக இருந்தாலும், கதிர்- முல்லை காதலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும், இவர்கள் இருவரின் காதல் காட்சிகளுக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் மிகவும் அதிகம் என்றே சொல்லலாம்.

பல ஆண்டுகள் சின்னத் திரையில் போராடிய இவருக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல முகத்தினைக் கொடுத்தது. அவர் அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்தவகையில் ரொம்பவும் சிம்பிளான கெட்டப்பில் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்டுள்ளார்.

Continue Reading
To Top