Connect with us

கொரோனா வதந்திக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன் நயன்தாரா: வைரலாகும் வீடியோ

பொழுதுபோக்கு

கொரோனா வதந்திக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன் நயன்தாரா: வைரலாகும் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து இருவரும் எழும்பூரில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த செய்தியை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தரப்பினர் நேற்றே மறுத்துள்ள நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சிறு வயதில் இருக்கும் காட்சிகள் உள்ளன. இருவரும் சந்தோஷமாக ஆடி பாடி நடனம் ஆடும் இந்த வீடியோ கொரோனா குறித்த வதந்திக்கு பதிலடி தரும் வகையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

கொரோனா வதந்தியை பற்றி கவலைப்படாமல் நாங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்து வருகிறோம் என்றும் அதனை பார்க்கும் அளவுக்கு கடவுள் எங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் வளத்தையும் கொடுத்துள்ளார் என்றும் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

Continue Reading
To Top