ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்

கொலையுதிர்காலம் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன் தாரா குறித்து அவதூறாக தவறான வார்த்தை பிரயோகத்தை விட்டுவிட்டார்.

அதனால் வெகுண்டெழுந்த திரையுலகம் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. நயன் தாராவின் காதலர் ஆன விக்னேஷ் சிவனும் அதை கடுமையாக கண்டித்தார்.

இந்நிலையில் திமுகவில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டதாக உடனடியாக அறிவிப்பு வெளியானது.

ஸ்டாலின் கண்டனமும் தெரிவித்தார்

பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்

இதற்கு விக்னேஷ் சிவன் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.